Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
    தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: 
    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2017-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுக்கும்,  ஈட்டிய விடுப்புக்கும் தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத தனியார் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு பிரச்னைக்கு அரசு தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும்.  
    தொழிலாளர்களின் மீது பாரபட்சம் காட்டும் போக்கினை தனியார் நிர்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai