Enable Javscript for better performance
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 24th March 2018 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது உக்கான் நகர். இந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 105-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி ஆகியவற்றை செய்துதரக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பினரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மின்சார வசதி இல்லாததால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமரசம் செய்து, உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். அப்போது பொது மக்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai