Enable Javscript for better performance
அன்னூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட செல்லனூரில் பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வார்டு, செல்லனூரில் அன்னூர் பேரூராட்சி சார்பில் 2017-2018 -ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கழிப்பிடம் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி மற்றும் கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கழிப்பிடம் கட்டுமானப் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன.
    இதையடுத்து, அப்பகுதி மக்கள் 50 பேர் கழிப்பிடம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் கழிப்பிடம் கட்டுமான ப்பணியை பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தவும், ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும் உத்ததசனைப்னை
    பிறப்பித்து உடனடியாகக் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் நகலை பொதுகமக்ளுக்கு வழங்கினார்.
    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai