Enable Javscript for better performance
அவினாசிலிங்கம் பல்கலை.யில் விளக்கேற்றும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, ஆராய்ச்சி என பட்டம் பெற்ற 1,925 மாணவிகள் விளக்கேற்றினர்.
    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலலிதாம்பிக்கை ஆசிரமம் சுவாமி ஜகதாத்மானந்த பேசிதாவது:
    மனித மதிப்புகளை உணர்ந்து செயல்படும் கல்வி நிலையங்கள் கோயில் ஆகும். எங்கும் இறைவன் நிறைந்திருப்பதுபோல, எங்கும் அறிவு நிறைந்துள்ளது. கல்வி, அறியாமை இருளை அகற்றும் எனும் உண்மையை மாணவிகள் உணர வேண்டும். உண்மையைப் பின்பற்றி சரியான வழியில் செல்ல வேண்டும்.
    பிரார்த்தனை மனித வாழ்க்கையில் முக்கியம். ஒவ்வொருவரும் அனைத்து சமய வழிபாட்டைக் கடைப்பிடிப்பது நல்வழிப்படுத்தும். கடமைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு எண்ணங்களிலும், செயல்களிலும் உயர்ந்து, கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வில் முன்னேறவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பல்கலைக்கழகத் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai