Enable Javscript for better performance
இந்து முன்னணி நிர்வாகி கைதைக் கண்டித்து சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி நிர்வாகி கைதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை சரவணம்பட்டி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    கோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த உருவை பாலன்(எ) பாலகிருஷ்ணன், மதியழகன், கோவிந்தன் ஆகியோரை துடியலூர் காவல் துறையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணம்பட்டி - துடியலூர் சாலை சந்திப்பில், இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலுக்கு ஒன்றியச் செயலர் பாலு தலைமை வகித்தார்.அப்போது, அங்கு பாதுகாப்புக்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர், 3 பெண்கள் உள்பட 30 பேரைக் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    அதேபோல, கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட காரமடை, துடியலூர், பெ.நா.பாளையம், அன்னூர், கோவில்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 207 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai