Enable Javscript for better performance
குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1 கோடி கல்வி உதவித் தொகை- Dinamani

சுடச்சுட

    

    குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1 கோடி கல்வி உதவித் தொகை

    By DIN  |   Published on : 24th March 2018 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மகாத்மா காந்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவையொட்டி டாக்டர் நா. மகாலிங்கத்தின் 95-ஆவது பிறந்த நாள் விழா மார்ச் 18 முதல் 23-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் கல்வி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய குமரகுரு கல்லூரி மாணவர்கள் 1,025 பேருக்கு ரூ. 1.02 கோடி மதிப்பிலான மகாத்மா காந்தியின் பெயரிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    இந்த விழாவில் குமரகுரு கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். இதில், கலந்துகொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி, துணை முதல்வர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
    எந்தப் புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால், அது உங்கள் மனதை வளர்த்து, முதிர்ச்சி அடையச் செய்ய வேண்டும். முழுமையான மனிதனாகத் திகழ தோற்றம், குணங்கள், ஞானம் ஆகியவற்றுடன் மன்னிப்பதற்கான ஒரு மனப்பான்மையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். நேரத்தைப் பயன்படுத்தும் முறையிலேயே சாதனையாளருக்கும், சாதாரண மனிதருக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது என்றார்.
    குமரகுரு கல்லூரியில் மகாத்மா காந்தி உதவித்தொகை கடந்த 2007 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 9 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரை கல்லூரியின் இணைத் தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் அறிமுகப்படுத்தி கௌரவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai