Enable Javscript for better performance
கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு அருகே நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
    ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கோவை வந்தார்.
    அவருடன், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், செல்வி, டி.ஆர்.டி. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். அவர்களுக்கு திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, மாநில இளைஞரணி அணி முன்னாள் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
    அதைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பனை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai