Enable Javscript for better performance
தாற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தாற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள கணினி பதிவேற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
    இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கோவை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஓராண்டு தாற்காலி அடிப்படையில் கணினி பதிவேற்றுநர் பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகத் தகுதியான நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    இந்தப் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்யும் நபர்களைத் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் நபர்கள் வயது, கல்வி மற்றும் ஜாதிச் சான்றுகளுடன் உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை-18 எனும் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    இதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி, தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி, கணினி இயக்குவதற்கான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும், 2017 ஜூலை 1-ஆம் தேதி 32 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai