Enable Javscript for better performance
முதியவரைக் கொன்று கிணற்றில் சடலம் வீச்சு: ஒருவர் கைது; மூவருக்கு வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    முதியவரைக் கொன்று கிணற்றில் சடலம் வீச்சு: ஒருவர் கைது; மூவருக்கு வலைவீச்சு

    By DIN  |   Published on : 24th March 2018 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே, முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    கோவை மாவட்டம், சூலூர் அருகே, பட்டணத்தில் உள்ளது வக்கீல் தோட்டம். இங்கு பயன்படுத்தப்படாத விவசாயக் கிணறு உள்ளது. இக் கிணற்றில் ஒருவரது சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
    அங்கு சென்ற சூலூர் போலீஸாரும், பீளமேடு தீயணைப்புத் துறையினரும் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். அந்தச் சடலம், உண்ணிகிருஷ்ணன் என்பவரது சடலம் என்று தெரியவந்தது.
    கோவை, செட்டிபாளையத்தில் வசித்தவர் உண்ணிகிருஷ்ணன் (56), தையல் தொழிலாளி. உன்னி கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் சங்கரும், அப்பா சண்முகமும் அங்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டினர்.
    அவரைக் கொலை செய்தவர்கள், உடலில் கல்லைக் கட்டி, இந்தக் கிணற்றில் வீசியுள்ளனர். இருப்பினும், சடலம் மிதந்து மேலே வந்ததால் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
    இது தொடர்பாக போத்தனூரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai