Enable Javscript for better performance
வீரப்பனின் சகோதரருக்கு மூச்சுத் திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    வீரப்பனின் சகோதரருக்கு மூச்சுத் திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி

    By DIN  |   Published on : 24th March 2018 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் (70) உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
    சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன். இவர் சத்தியமங்கலம் வனப் பகுதியில் வன அதிகாரி ஒருவரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சேலம் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவர் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
    இந்நிலையில், மாதையனுக்கு வெள்ளிக்கிழமை காலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai