Enable Javscript for better performance
தோட்டத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.5.13 அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.  கடந்த 2 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வடைந்து வருகிறது.  
     இந்நிலையில்,  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி ரூ.5.13 உயர்வடைந்துள்ளது. தொழிலாளர்கள் தற்போது தினக் கூலியாக ரூ. 303.57 பெற்று வருகின்றனர். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு பெற்றிருப்பதால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்  தினக்கூலியாக ரூ. 308.70 பெற உள்ளனர். இந்த உயர்வு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai