Enable Javscript for better performance
பங்குனி உத்திர தீர்த்த காவடிக் குழுவினர் பாதயாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திர தீர்த்த காவடிக் குழுவினர் பாதயாத்திரை

    By DIN  |   Published on : 31st March 2018 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் அருகே உள்ள குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தீர்த்தக் காவடிக் குழுவினர் பாதயாத்திரை  மேற்கொண்டனர். 
    அன்னூர் அருகே உள்ள குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, அன்னூரில் இருந்து பங்குனி உத்திர தீர்த்தக் காவடி குழுவினர் 32ஆம் ஆண்டாக தீர்த்தக் காவடி எடுத்து  பாதயாத்திரை சென்றனர். இதற்காக வியாழக்கிழமை கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து 58 தீர்த்தக் குடங்களில் புனித நீர் எடுத்து வந்தனர். வெள்ளிக்கிழமை அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு பாதயாத்திரையாக புறப்பட்டு குருக்கிளையம்பாளையம், பொகளுர் வழியாக குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர்.
    அங்கு வள்ளி, தெய்வானை முருகப் பெருமானுக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,
    தீபாராதனை, தேர் கிரிவலம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை பங்குனி உத்திர தீர்த்தக் காவடி குழுத் தலைவர்  சிவசக்தி பாபு,  பொறுப்பாளர்கள் ரங்கசாமி, கனகராஜ், ரங்கசாமி, கோபிநாதன்,
    சோமசுந்தரம், காவடி பூசாரி கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai