Enable Javscript for better performance
"பாரதி என்றொரு மானுடன்' நூல் அறிமுக விழா: கோவையில் நாளை நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    "பாரதி என்றொரு மானுடன்' நூல் அறிமுக விழா: கோவையில் நாளை நடக்கிறது

    By DIN  |   Published on : 31st March 2018 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் எழுதிய "பாரதி என்றொரு மானுடன்' நூல் அறிமுக விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறுகிறது.
    கங்கா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன், மகாகவி பாரதியின் மானுட நேயம் பற்றி ஆய்வு செய்து தனது 82-ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்ற தமிழறிஞராவார். இவர், பாரதியின் வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகள் குறித்தும், அவரது படைப்புகளில் உள்ள மானுடப் பண்புகள் குறித்தும் "பாரதி என்றொரு மானுடன்' என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்.
     இந்த நூலின் அறிமுக விழா கோவை நானி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு, கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்குகிறார். கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜ சபாபதி வரவேற்கிறார். ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி. சிவம் நூலை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.  நூலாசிரியர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் ஏற்புரை வழங்குகிறார். மருத்துவமனையின் மற்றொரு இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் நன்றி கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் இயக்குநர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai