Enable Javscript for better performance
பூட்டை உடைத்து 3.5 பவுன், ரூ. 1.5 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகை,  ரூ. 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    சூலூர் அருகே காங்கேயம்பாளையம், பொன்மணி நகரில் வசிப்பவர் மோகன்குமார்(30). இவர், சூலூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். 
    இந்நிலையில் இவர், மனைவியுடன் பல்லடம் அருகே உள்ள மாமனார் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்றுவிட்டார். 
    இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்ட  அருகில் வசிப்பவர்கள் மோகன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்துபார்த்தபோது,  பீரோவில் இருந்த 3.5 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள்  திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai