Enable Javscript for better performance
"பெற்றோர் ஒத்துழைப்பு அளித்தால் ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியும்'- Dinamani

சுடச்சுட

    

    "பெற்றோர் ஒத்துழைப்பு அளித்தால் ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியும்'

    By DIN  |   Published on : 31st March 2018 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெற்றோர் ஒத்துழைப்புடன்  ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 
    இதுகுறித்து ஆட்டிசம் சிகிச்சை நிபுணர் தீபா மாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்டிசம் என்பது உடல் ரீதியான கோளாறு மட்டுமே தவிர அவை நோய் அல்ல. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிந்தனை, உணர்வுகள் வெளிப்பாடுகளில் சீரற்ற தன்மையோடு இருக்கும். உணர்வுக்கு பொருத்தமான செயல்களை வெளிப்படுத்துவதில், தொடர்ச்சி இருக்காது. ஒரு செயலையே திரும்ப, திரும்ப செய்வார்கள். ஒவ்வொரு ஆட்டிசக் குழந்தைகளும் வெவ்வேறு மாதிரியான கோளாறுகளுடன் காணப்படுவார்கள்.
    குழந்தையின் வளர்ச்சி நிலையைக் கொண்டு அதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகளிள் சுமார் 23 குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் பாதிப்பின் காரணத்தைபோல அவற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணமும் தெரியவில்லை. பல வகையான ஆராய்ச்சிகள் மரபணு காரணிகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பாற்றலியல், வளர்சிதை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் அன்றாட எதிர்வினை செயல்பாடுகளில் மிகவும் தாமதமாகவும், வித்தியாசமாகவும் காணப்படுவார்கள்.
    ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும். தானே சிக்கல்களைத் தீர்க்க, உணர்வுகளைப் புரிந்து கொள்ள, அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்துவதன் மூலம் பாதிப்பில் இருந்து குணப்படுத்த முடியும். இதற்கு பெற்றோர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.  அவர்களின் ஒத்துழைப்பு மூலம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைக் குணப்படுத்த முடியும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai