Enable Javscript for better performance
பொம்மைத் துப்பாக்கி காட்டி மிரட்டியவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிபரை பொம்மை துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியவர்களை துடியலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
    கோவை, தண்டுமாரியம்மன் கோயில் அருகே மின்விளக்குகள் கடை வைத்திருப்பவர் ஹர்பிரீத் சிங் (60). இவர்,  கவுண்டம்பாளையத்தை அடுத்த கவுண்டர் மில் பிரிவில் உள்ள ஒரு கடைக்கு  பொருள்கள் வாங்க அடிக்கடி வருவது வழக்கம். 
    இந்நிலையில்,  கவுண்டர் மில் பிரிவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நின்று கொண்டிருந்த இவரை  சில நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர். 
    அப்போது அவர் சப்தம்போடவே பொதுமக்கள் அவர்களைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பித்தனர். விசாரணையில் அது பொம்மைத் துப்பாக்கி என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 
    இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கோவை,  உடையாம்பாளையத்தைச் சேர்ந்த மந்திரிசெல்வம் (23), வெள்ளலூர் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த பரணி மகாராஜேஸ்வரன், கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் (22) ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் இவர்கள் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai