Enable Javscript for better performance
மதுக்கரை வாரச் சந்தையில்  வியாபாரிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையை அடுத்த மதுக்கரை வாரச் சந்தையில் வியாபாரிகள்,  பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    மதுக்கரை கடை வீதியில்  வெள்ளிக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இதில்,  காய்கறி, மளிகைப் பொருள்களை வியாபாரிகள் விற்று வருகின்றனர். இந்த சந்தையால் மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்  பயனடைந்து வந்தனர். 
    இந்நிலையில்,  அனுமதியின்றி இயங்கி வரும் வாரச் சந்தைகளை அகற்ற கோவை மாவட்ட ஆணையர்  அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மதுக்கரையில் இயங்கி வந்த வாரச் சந்தையை அகற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள், பொதுமக்கள் மதுக்கரை கடை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் உள்கோட்ட  காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்,  இப்பிரச்னை குறித்து மதுக்கரை பேரூராட்சி நிர்வாக அதிகாரியை சந்தித்து திங்கள்கிழமை மனு அளிப்பதாக தெரிவித்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai