Enable Javscript for better performance
மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுக்கரையை அடுத்த எட்டிமடையில் சாலை விரிவாக்கப் பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுவதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
    கோவை - பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடைப் பிரிவிலிருந்து எட்டிமடை ரயில்நிலையம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதனால், அங்கு இடையூறாக உள்ள சில மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. 
    இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வெட்டியதாக தெரிகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கேள்விப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மரம் வெட்டும் பணியைத் தடுத்து நிறுத்தினர். வருவாய்த் துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai