Enable Javscript for better performance
மருதமலையில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கோவையை அடுத்த மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
      கோவையை அடுத்த மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  ஆண்டுதோறும் தைப்பூசம்,  பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  நிகழாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம்,  சிறப்பு அலங்கார பூஜை,  மகா தீபாரதனை ஆகியன நடைபெற்றன.
     இதைத் தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தங்க வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலை 6 மணி அளவில் தங்க ரதப் புறப்பாடு நடைபெற்றது. விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்களின் கூட்டம் காரணமாக பிற்பகலில் நடை அடைக்கப்படவில்லை.
    காந்தி பார்க் முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில், கோணியம்மன் கோயில்,  ஈச்சனாரி விநாயகர் கோயில்,  சூலக்கல் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai