Enable Javscript for better performance
மேற்குவங்க கலவரத்தில் காயமடைந்த  ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கோவையில் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    மேற்குவங்க கலவரத்தில் காயமடைந்த  ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கோவையில் சிகிச்சை

    By DIN  |   Published on : 31st March 2018 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டு வெடிகுண்டு வீசியதில் கை சேதமடைந்த மேற்குவங்க மாநில ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கை மறுசீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரிந்தம் தத்தா சௌத்ரி (46). இவர் மீது அந்த மாநிலத்தில் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. 
    இதில்  அவரது வலது கையின் மூட்டுப் பகுதியில் இருந்து மணிக் கட்டு பகுதி வரையில் உள்ள எலும்பு மற்றும் தசைகள் முற்றிலும் சேதமடைந்தன.
     நுண்ணிய அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கை அவரது கையை மறுசீரமைப்பு செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரிந்தம் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மார்ச் 29- ஆம் தேதி  அழைத்து வரப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     அவருக்கு மருத்துவமனையின் இயக்குநரும்,  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜசபாபதி தலைமையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை 5 மணி நேரம் நுண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நுண்ணிய நரம்புகளை இணைத்தனர். 
    இதைத் தொடர்ந்து தசைகள் இல்லாத பகுதிக்கு உடலின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுக்கப்பட்டு 10 நாள்களுக்குப் பிறகு பொருத்தப்பட உள்ளது. இதற்காக அவர் 4  முதல் 6 வாரம் வரையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர் ராஜசபாபதி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai