Enable Javscript for better performance
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 
    இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    கோவை, பீளமேடு பிளேக் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள வி.கே.சாலையில் வசித்து வருபவர் எஸ்.பாபு (40).  இவர்,  ரமேஷ் என்பவருடன் சேர்ந்து காரில் 1,500 கிலோ ரேஷன் அரிசியைக் கேரளத்துக்கு 2018 மார்ச் 11-ஆம் தேதி கடத்த முயன்றபோது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
    விசாரணையில்,  பாபு மீது ஏற்கெனவே கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆகவே தொடர்ந்து அரிசிக் கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா மாநகர காவல் ஆணையருக்குப் பரிந்துரை செய்திருந்தார். 
    இந்தப் பரிந்துரையின்பேரில் பாபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாபுவிடம் காவல் துறையினர் வழங்கினர். பாபு ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai