Enable Javscript for better performance
வட்டமலை ஆண்டவர் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அ.குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அ.குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 26ஆம் தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து  கொடியேற்றம் நடைபெற்றது. மாலை யாக சாலை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 27ஆம் தேதி  மற்றும் 28ஆம் தேதி காலை யாக சாலை பூஜை நடைபெற்றது. 29ஆம்தேதி  காலை யாகசாலை புறப்பாடு, மாலை திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை  8.45 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. 
    இந் நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    சனிக்கிழமை (மார்ச் 31) காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை,  இரவு 8 மணிக்கு
    பரிவேட்டை, குதிரை வாகன காட்சி புறப்பாடு, தெப்போற்சவம் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற உள்ளன.
     திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai