Enable Javscript for better performance
வீட்டில் நகை  திருடியதாக பணிப் பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் வேலை பார்த்த வீட்டில் இருந்து 17 பவுன் நகை,  ரூ. 26 ஆயிரம் பணத்தைத் திருடியதாக பணிப் பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, ரத்தினபுரி விநாயகர் கோயில் வீதியில் வசித்து வருபவர் எஸ். சுந்தரி (52). இவர் மார்ச் 5-ஆம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பின்னர் மார்ச் 26-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை, ரூ. 26 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின்பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  
    விசாரணையில்,  அவரது வீட்டில் வேலை செய்துவந்த ரத்தினபுரியைச் சேர்ந்த வி.கிரிஜா (35) நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கிரிஜாவைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 17 பவுன் நகை,  ரூ.26 ஆயிரம் பணத்தை மீட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai