Enable Javscript for better performance
காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு  முதல்வர் அறிவித்த தனித் திட்டத்தை செயல்படுத்த  தமிழக விவச- Dinamani

சுடச்சுட

    

    காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு  முதல்வர் அறிவித்த தனித் திட்டத்தை செயல்படுத்த  தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த தனித்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.எஸ் ரங்கசாமி கூறியது : 
    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்டுப் போன காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் காலிங்கராயன் பகுதியிலிருந்து நீரேற்று முறையில் இப்பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவது நடைமுறை சாத்தியமற்றது. 
    காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகள் பயன்பெறும்வகையில் இப்பகுதிகளை காலிங்கராயன் திட்டத்தில் சேர்ப்பதற்கு பதிலாக தனித் திட்டமாக செயல்படுத்தப்படும் என அண்மையில் கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் அது பற்றிய ஆய்வை மேற்கொள்ளாமலேயே தற்போது இது குறித்து முதல்வர் அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
    ஆகவே ஏற்கனவே முதல்வர் அறிவித்த தனித்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தான் இப்பகுதிகள் முழுமையான பயனைப் பெற முடியும். காலிங்கராயன் கால்வாய் பகுதியிலிருந்து நீரெடுத்து செயல்படுத்தப்படும் நீரேற்று திட்டம்தான் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் என்ற பெயரில் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் நீரேற்று முறையில் காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு நீர் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆகவே காலிங்கராயன் திட்டத்தில் இப்பகுதிகளை சேர்ப்பதற்கு பதிலாக முதல்வர் அறிவித்த தனித்திட்டம் மூலம் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது 
    தான் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் முழுபயனை அடையும் வகையில்,  குளம், குட்டைகளில் நீர் நிரப்புவதும் நடைமுறை சாத்தியமாகும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai