Enable Javscript for better performance
குறைந்து வரும் ஏற்றுமதி: கூட்டமைப்பு கவலை- Dinamani

சுடச்சுட

    

    குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத் தயாரிப்புகளின் ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிப்பதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (பியோ) தென் மண்டலத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
    2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத ஏற்றுமதி தகவல்களைப் பார்க்கும்போது, உழைப்பு அதிகம் தேவைப்படும்  குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.)  வளர்ச்சி கவலையை ஏற்படுத்துகிறது. அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
     எம்.எஸ்.எம்.இ. துறைகள் கடுமையான தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே சந்தைகளில் எதிர்கொண்டு வரும் முக்கியத் தடைகளைத் தவிர, நடைமுறை செலவினங்கள் உயர்வு,  நிதிப் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி. தொகை நிலுவை ஆகியவையும் பெரும் தடைகளாக உள்ளன.
    இதைத் தவிர, அண்டை நாடுகளின் கடுமையான சந்தைப் போட்டியும் இன்னொரு முக்கிய தடையாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரத்துடன் இந்த ஆண்டு நிலவரத்தை ஒப்பிடும்போது, ஆயத்த ஆடைத் துறை 24.40 சதவீத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.இதைச் சரி செய்ய முன்பு நடைமுறையில் இருந்த பழைய விகிதத்திலேயே ஆர்.ஓ.எஸ்.எல்., நிலுவையில் இருக்கும் இதர சலுகைகளையும் வழங்க வேண்டும். அதிகாரிகளும், அரசுத் துறைகளும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இந்தசிக்கலைச் சமாளிக்க முடியாது.
    ஜி.எஸ்.டி.என். இணையதளத்தில் இன்னும் சில வசதிகளை ஏற்படுத்தாதது, விவரங்கள் ஒருங்கிணைக்கப்படாதது காரணமாக ஜி.எஸ்.டி. வரிகளைத் திரும்பப் பெறுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்த விவகாரத்தை முக்கியப் பிரச்னையாகக் கருதி  உடனடியாக சரி செய்யாவிட்டால், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் வெகு விரைவில் மூடப்படும் சூழ்நிலை உருவாகும்.
    குறு, சிறு, நடுத்தர  தொழில் நிறுவனங்களுடன் உணவு பதப்படுத்துதல், வேளாண்மைத் துறைகளின் வீழ்ச்சியும் கவலையை மேலும் அதிகரிப்பதாக இருப்பதாக சக்திவேல் தெரிவித்துள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai