Enable Javscript for better performance
கே.எம்.சி.எச். சார்பில் பார்கின்சன் நோய்க்கு மே 20-இல் இலவச ஆலோசனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கே.எம்.சி.எச். சார்பில் பார்கின்சன் நோய்க்கு மே 20-இல் இலவச ஆலோசனை முகாம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் பார்கின்சன் நோய்க்கு சிறப்பு இலவச ஆலோசனை முகாம் மே 20- ஆம் தேதி நடைபெறுகிறது.
    பார்கின்சன் நோய் என்பது பொதுவாக அனைவரையும் பாதிக்கும் மற்றும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நரம்பியல் பிரச்னை ஆகும். இந்தியாவில் 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளையில் டோபாமின் எனும் வேதிப் பொருள் குறைவால் பார்கின்சன் என்ற நடுக்குவாத நோய் ஏற்படுகிறது. 
    பார்கின்சன் நோயின் ஆரம்ப கட்டத்தில் கைகளில் நடுக்கம், இறுக்கம் ஏற்படும். நடை பாதிக்கும். கையெழுத்து சுருங்கும்,  முகத்தில் எந்த உணர்வுகள் இல்லாமல் வாடியிருக்கும், சமநிலை பாதிக்கப்படுவாதால் அடிக்கடி கீழே விழ நேரிடும். உடம்பின் ஒரு பகுதியில் ஆரம்பித்து பிற பகுதிக்கும் பரவும்.  அடைவு குறைபாட்டினால் பாதம் உறைந்து தரையோடு ஓட்டிக் கொண்ட உணர்வு ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக பார்கின்சன் நோயை குணப்படுத்த முடியாது. பல்வேறு வகையான மருந்துகளால் சமாளிக்க முடியும். டோபாமின் ரசாயன அளவை அதிகரிக்கவே, தூண்டவோ செய்யலாம். தற்போது ஆழ் மூளைக்குள் மின் தூண்டலை ஏற்படுத்தும் கருவிகள் பொருத்தப்படுகிறது. மார்பு பகுதியில் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு,  மின் தூண்டுதல் கருவியுடன் இணைக்கப்படுகிறது. இவை மூளையை தூண்டி இணைப்பை சரி செய்கிறது. இது ஆழ் மூளை தூண்டுதல் என அழைக்கப்படுகிறது. இதற்கு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
    இந்த நோய் தொடர்பாக கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம் மே 20- ஆம் தேதி நடைபெறுகிறது. முன்பதிவு தொடர்புக்கு 7339333485 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai