Enable Javscript for better performance
கேரளத்துக்கு கடத்த முயன்ற 160 லிட்டர் பாமாயில் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயன்ற 160 லிட்டர் பாமாயில் பறிமுதல்

    By DIN  |   Published on : 18th May 2018 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 160 லிட்டர் பாமாயிலை குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
     பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமையில் அதிகாரிகள்  வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளைப் பார்த்தவுடன் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிவிட்டார். ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் 160 லிட்டர் பாமாயில் இருந்தது. இதையடுத்து, பாமாயிலையும், ஆட்டோவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai