Enable Javscript for better performance
கோவையில் இன்று பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இன்று பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
     உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இவருடன் வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
     இதையடுத்து பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் தலைமையில் பேராசிரியர்கள் என்.ஜெயகுமார், பி.திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய 3 பேர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
     இந்த குழுவினர் பல்கலைக்கழக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநெறிக் கல்வித் திட்டத்தை முறைப்படுத்துவது, புதிய பாடத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக வியாழக்கிழமையே கோவை வந்தடைந்த முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், 
    பல்கலைக்கழகம் சென்று பணிகளை கவனித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai