Enable Javscript for better performance
கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குஇறந்த முதியவரின் உடல் தானம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இறந்த முதியவரின் உடல் தானம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் உயிரிழந்த 84 வயது முதியவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டது. 
    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் வசித்து வந்தவர்  கே.வி.கணபதி (84). இவர் இறந்தவுடன் தனது  உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதற்காக தன்னார்வ அமைப்பு உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்து வைத்திருந்தார். 
     இந்த நிலையில், வயது முதிர்வு கரணமாக கணபதி புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை கலாம் மக்கள் அறக்கட்டளை நிர்வாகிகளின் உதவியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai