Enable Javscript for better performance
கோவை-தில்லி விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட பயணிகள் புதன்கிழமை இரவு அவதிக்குள்ளாகினர். 
     கோவையில் இருந்து தில்லிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு 7 மணிக்கு 110 பயணிகளுடன் புறப்பட இருந்த விமானத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டது. இதன் பிறகு விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணி அளவில் புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் தில்லி சென்றடைந்தது. இந்தத் தாமதம் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai