Enable Javscript for better performance
டான்செட் நுழைவுத் தேர்வு: கோவையில் 3 மையங்களில் 4,632 பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    டான்செட் நுழைவுத் தேர்வு: கோவையில் 3 மையங்களில் 4,632 பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 18th May 2018 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாளை (சனிக்கிழமை) தொடங்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) கோவையில் 3 மையங்களில் 4,632 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
    எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுகள் மே 19, 20-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
     அதேபோல், எம்.சி.ஏ. படிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 
    இந்த ஆண்டு கோவை மண்டலத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 1,772 மாணவர்களும், எம்.பி.ஏ. படிப்புக்கு 2,412 மாணவர்களும், எம்.சி.ஏ.வுக்கு 448 பேர்களும் என மொத்தம் 4,632 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    இவர்களுக்கு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai