Enable Javscript for better performance
நீரா இறக்கும் விவசாயிகளை போலீஸார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    நீரா இறக்கும் விவசாயிகளை போலீஸார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 18th May 2018 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீரா இறக்கும் விவசாயிகளை போலீஸார் துன்புறுத்துவதாக தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 
    இதுகுறித்து  அச்சங்கத்தின் மாநில தலைவர் என்.கே.பொன்னுசாமி கோவை அருகே கருமத்தம்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு விரைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டதை வரவேற்கிறோம்.   நீரா பானத்தை இறக்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தற்போது தங்களின் தோட்டங்களில் இதற்கான உற்பத்தியை துவக்கியுள்ளனர். இந்நிலையல்,  காவல்துறையினர் தோட்டங்களில் புகுந்து நீரா இறக்க அனுமதி மறுத்து கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.  இதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai