Enable Javscript for better performance
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மே 20-இல் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மே 20-இல் விழிப்புணர்வு முகாம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த இலவச விழிப்புணர்வு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 20) கோவையில் நடைபெறுகிறது. 
    கோவையில் உள்ள எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனம்,  சிட்டிசன் வாய்ஸ் கிளப் ஆகியன சார்பில் ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள யோகிக் யோகா மையத்தில் இந்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 12 மணி வரையில்  நடைபெறுகிறது. இதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் ஆகியவை குறித்து  சட்ட வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். 
    இந்த முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 94430-39839,  98405-39839 என்ற செல்லிடப்பேசி எண்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) அல்லது குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று எய்ம்  நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai