Enable Javscript for better performance
பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: தபெதிகவினர் மீதான குண்டர் சட்டம் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: தபெதிகவினர் மீதான குண்டர் சட்டம் ரத்து

    By DIN  |   Published on : 18th May 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, பெரியார் சிலைகள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து கோவை பாஜக அலுவலகம் மீது கடந்த மார்ச் 7-ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தபெதிக மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஜீவானந்தம், தொண்டர்கள் கோபால் (எ) பாலன், கெளதம் ஆகியோர் போலீஸாரிடம் சரணடைந்தனர்.
    இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜீவானந்தம், பாலன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து இவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தனர். 
    மனுவை விசாரித்த 3 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர், இவர்கள் இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளனர்.
     இதைத் தொடர்ந்து கோவை சிறையில் இருக்கும் 3 பேரையும் பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தபெதிக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai