Enable Javscript for better performance
மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கரையில் உள்ள மாரியம்மன் வகையறா கோயில்களின் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை  மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
    மதுக்கரையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், அதன் வகையறா கோயில்களான மாகாளியம்மன், வஞ்சியம்மன், பட்டத்தரசியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சித்திரைத் திருவிழா ஏப் 18-ஆம் தேதி தொடங்கியது. மே  9-இல் மாரியம்மன் கோயிலில் திருவிழா கம்பம் நடப்பட்டது. மே 16-ஆம் தேதி திருக்கல்யாணம், பொங்கல் விழா, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.  வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மதுக்கரை முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி எடுத்துக் கொண்டு பொதுமக்கள் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். 
    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமானோர் அம்மனை தரிசித்தனர். இதையடுத்து மஞ்சள் நீராட்டு நடந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 18) மதியம் 12 மணிக்கு மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai