Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் வட்டத்தில் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வட்டத்தில்  புதன்கிழமை முதல் ஜமாபந்தி துவங்கியது. 
    மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் கோவை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கிறிஸ்டி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் ரங்கராஜன் வரவேற்றார். 
    முதல் நாள் முகாமில் கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பா ளையம் ஆகிய கிராம மக்களிடமிருந்து 149 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
    நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் வசந்தாமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுணா, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் தனபால், பாபு, ஏசுகண்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    தொடர்ந்து வியாழக்கிழமை (மே17) நடைபெற்ற 2-ம் நாள் முகாமில் மருதூர், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பா ளையம் கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து  வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, நிள அளவை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்பட 105 மனுக்கள் பெறப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai