Enable Javscript for better performance
விதிகளை மீறி மாணவர் சேர்க்கை: உயர் கல்வித் துறைக்கு மதிமுக நிர்வாகி மனு- Dinamani

சுடச்சுட

    

    விதிகளை மீறி மாணவர் சேர்க்கை: உயர் கல்வித் துறைக்கு மதிமுக நிர்வாகி மனு

    By DIN  |   Published on : 18th May 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு, மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் மனு அனுப்பியுள்ளார்.
    இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனு விவரம்:
    தமிழகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 7 லட்சம் மாணவர்கள் இந்த கல்லூரிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால், கல்லூரி நிர்வாகங்கள் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன.
    விண்ணப்பங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதுடன், அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே ஒரு விண்ணப்பம் போதுமானது என்ற கல்லூரிக் கல்வி இயக்குநகரத்தின் உத்தரவும் மீறப்படுகிறது. 
    பாடத்துக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதைக் குறிப்புப் புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று விதி இருக்கும்போது, கட்டண விவரங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் தனி அறையில் மட்டுமே சொல்லப்படுகின்றன.
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்பப் பெறும்போது சில தனியார் கல்லூரிகள் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகையை செலுத்தினால் மட்டுமே படிவங்களைப் பெற முடியும் என்று கட்டாயப்படுத்துகின்றன. சுயநிதி கல்லூரிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டிய நிலையில், அனைத்து இடங்களும் பணம் பெற்றுக்கொண்டே நிரப்பப்படுகின்றன.
    அதேபோல், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குப் பிறகுதான் தகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விதிகள் இருக்கும்போது, பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதல் நாளிலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மாணவர்களுக்கு சிரமத்தையும், பெற்றோருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. எனவே விதி மீறல்கள், கட்டணக் கொள்ளை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும்விதமாக ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai