ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன்பாளையம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன்பாளையம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன்பாளையத்தில் ஆவின் பால் குளிரூட்டும் கொள்முதல்  நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புதிதாகப் பதவியேற்றுள்ள ஆவின் தலைவர் கே.பி.ராஜு, அல்லிக்காரன்பாளையம் பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பால் கொள்முதல் செய்யும்போது சரியாக அளவீடு செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  அவரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர், தமிழக முதல்வரை நேரில் சந்திப்பதற்கு நவம்பர் 18ஆம் தேதி அனுமதி கிடைத்திருப்பதாகவும், அப்போது கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 
இந்த ஆய்வின்போது ஆவின் துணை மேலாளர் கல்பனா, அல்லப்பாளையம் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com