"ரத்தம் உறைதல் பாதிப்புக்கு உரிய சிகிச்சை அவசியம்'

ரத்தம் உறைதல் தொடர்பான பாதிப்புக்கு உரிய சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும் என கே.எம்.சி.எச். மருத்துவமனையின்


ரத்தம் உறைதல் தொடர்பான பாதிப்புக்கு உரிய சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும் என கே.எம்.சி.எச். மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: 
 ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13 ஆம் தேதி உலக ரத்த உறைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் ரத்தம் உறையும்போது, ரத்தக் குழாயில் ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு தாமதமாக செல்லும் அல்லது தடைபடும். 
அவ்வாறு ஏற்படும் ரத்த உறைவை எளிதில் தடுக்கலாம். இதற்கு சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வகை பாதிப்பு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ரத்த உறைவு ஏற்படும்போது இடுப்பு, கால்களில் கட்டியாக மாறுகிறது. இது நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்த உறைவு நாளங்களில் உள்ள வால்வுகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கம் ஏற்படும். 
 இதில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரத்த உறைதல் நோயில் இருந்த மீள உரிய சிகிச்சை பெறுவது அவசியம். இந்த பாதிப்பு பரம்பரையாகவும் வர வாய்ப்புள்ளது. மேலும் ஹார்மோன் கோளாறு, எலும்பு முறிவு சிகிச்சை, புகைப்பிடித்தல், நீண்ட தூர பயணம், பக்கவாதம், காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் ரத்த உறைவு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 உடலில் வீக்கம், தொடர் வலி, தோல் மிருதுவாக மாறுதல், தோலின் நிறம் மாறுதல் போன்றவை அறிகுறிகள் ஆகும். 50 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படாது. ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் இமேஜிங், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும். சுருக்கு காலுறைகள் போன்ற பல்வேறு முறையில் சிகிச்சை அளிக்க முடியும். இதில் ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும். உரிய சிகிச்சை மூலம் நோயில் இருந்து எளிதாக நிவாரணம் பெற முடியும். 
 தற்போது நவீன தொழில்நுட்ப மூலம் உறைவு ஏற்பட்டிருக்கும் இடத்தில் நேரடியாக மருந்து செலுத்தும் பட்சத்தில் உறைவுகள் உடைக்க முடியும். இதற்காக பல்வேறு நவீன கருவிகள் உள்ளன. இந்த நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com