அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த லாரி பறிமுதல்

உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
காரமடையில் இருந்து அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அழகாபுரி நகரில் உரிய அனுமதியின்றி லாரி மூலமாக கிராவல் மண் எடுத்து வந்து தனியார் நிலத்தில் கொட்டப்படுவதாக அன்னூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 
அதன்பேரில் அங்கு சென்ற லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை சிறைபிடித்தனர். அதுகுறித்து, அன்னூர் வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அன்னூர் வட்டாட்சியர் பழனிசாமி, உரிய  அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த லாரியைப் மறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றார். 
மேலும் இதுகுறித்து வருவாய்க் கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அதன்பேரில் உரிய உத்தரவுக்குப் பின்னர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com