குறுந்தொழில் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

கோவை கொடிசியா வளாகத்தில் குறுந்தொழில் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கோவை கொடிசியா வளாகத்தில் குறுந்தொழில் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
 கொடிசியா, பவர் 2 எஸ்.எம்.இ. ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிறு, குறுந் தொழிற்சாலைகளின் உற்பத்தியைப் பெருக்குவது, திறனை மேம்படுத்துவது ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
மேலும், இதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன், மூலப் பொருள்களை வாங்குவது, குறித்த நேரத்துக்கு உற்பத்திப் பொருள்களை வழங்குவது தொடர்பாக தொழில்துறையினர் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பவர் 2 எஸ்.எம்.இ., கொடிசியா அமைப்புகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி பேசும்போது, "கோவையில் தொழில் துறையினருக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. 
இந்நிலையில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட உள்ள இதுபோன்ற முயற்சிகளால் தொழில் துறை மேலும் வளரும்' என்றார். 
பவர் 2 எஸ்.எம்.இ. அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் ஆர்.நாராயணன் பேசும்போது, "தமிழகத்தில் மொத்தம் 2.18 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 
வளர்ச்சி, மேம்பாட்டுக்கான சிறப்பான சூழலை உருவாக்குவதன் மூலமாக நல்ல லாபத்தை சிறு, குறு நிறுவனங்களால் பெற முடியும். இத்தகைய நிகழ்வுகள் மூலமாக சிறு, குறு நிறுவனங்களின் ஒட்டுமொத்தத் திறன் மேம்படுத்தப்படும்' என்றார். இந்நிகழ்ச்சியில், சிட்பியின் உதவிப் பொது மேலாளர் டி.பாலச்சந்திரன், எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவனத்தின் இணை இயக்குநர் சதீஷ்குமார், தொழில் நிறுவனங்களின் பல்வேறு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com