விவசாயி மீது தாக்குதல்: தந்தை, மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை

கால்வாய் தண்ணீருக்காக விவசாயியைத் தாக்கிய தந்தை, மகனுக்கு பொள்ளாச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள்

கால்வாய் தண்ணீருக்காக விவசாயியைத் தாக்கிய தந்தை, மகனுக்கு பொள்ளாச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரைச் சேர்ந்தவர் மயில்சாமி (70). விவசாயி. இவரது பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (59). இருவருக்கும் பிஏபி கால்வாய் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் தகராறு இருந்து வந்துள்ளது. 
இந்நிலையில், மயில்சாமிக்கும், சக்திவேலுக்கும் தண்ணீர் பகிர்மானத்தில் 2013 நவம்பர் 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சக்திவேலுவும், அவரது மகன் செந்தில்குமாரும் (32) மண்வெட்டியால் மயில்சாமியைத் தாக்கியுள்ளனர்.  அதைப்பார்த்து, அருகில் இருந்த தண்டியப்பன் தாக்குதலைச் தடுக்கச் சென்றுள்ளார்.  அவரையும் சக்திவேலுவும், செந்தில்குமாரும் தாக்கியுள்ளனர். இதில், மயில்சாமிக்கு வாய்பேச முடியாமல் போய்விட்டது.
இதையடுத்து, தண்டியப்பன் அளித்த புகாரின்பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை  பொள்ளாச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி ரவி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அதில், சக்திவேலுக்கும், செந்தில்குமாருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com