வேளாண் கல்லூரி மாணவி பாலியல் விவகாரம்: இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கிய வேளாண்மைப் பல்கலைக்கழக

உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கிய வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு வேளாண் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி மையம் உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில், இக்கல்லூரியில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாக புகார் தெரிவித்தார்.
 இதையடுத்து உதவிப் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிக் காப்பாளர்களை வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்தது. அதேபோல், புகார் தெரிவித்த மாணவியும் திருச்சி வேளாண்மைக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் திருச்சி கல்லூரியில் சேராத நிலையில் அவரை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கம் செய்துள்ளது.
 இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை மீண்டும் வாழவச்சனூர் கல்லூரியிலேயே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சம்பந்தப்பட்ட மாணவியுடன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலர் வி.மாரியப்பன் தலைமையில், மாவட்டச் செயலர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியுடன் துணைவேந்தர் கு.ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com