சாந்தலிங்க அடிகளாருக்கு பிற சமூகத்தினர் அஞ்சலி

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய உள்ளிட்ட பிற சமூகத்தினரும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய உள்ளிட்ட பிற சமூகத்தினரும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
 தமிழ் மொழிக்காகவும்,  தமிழ் சமூகத்துக்காகவும் தொண்டாற்றிய பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு, கோவை கத்தோலிக் திருச்சபை கூட்டமைப்பு சார்பில் நிர்வாகி ஜோசப் பிரான்ஸிஸ் தலைமையில் திருச்சபை நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
 சாந்தலிங்க அடிகளார் பிற மதத்தினருக்கும் மதிப்பளிப்பவராகவும், கோவை மறை மாவட்டத்துக்காக பல்வேறு நலப் பணிகளை ஆற்றியதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
கோவை ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.ஆர்.பஷீர் அகமது,  தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், செல்வபுரம் பள்ளிவாசல் தலைவர் இப்ராஹிம், ஐக்கிய ஜமாத் நிர்வாகி அயூப் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
 இது தவிர தமிழறிஞர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்,  ஓம்சக்தி இதழாசிரியர் பெ.சிதம்பரநாதன், விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிஞர் கவிதாசன், கிருஷ்ணராஜ் வாணவராயர், கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல ஜி.பழனிசாமி, பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், கோவை மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன்,  ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் எஸ்.மலர்விழி,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, சண்முகநாதன், திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக கோட்டப் பொறுப்பாளர் ஜி.கே.செல்வக்குமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநகர் மாவட்டத் தலைவர் சி.ஆர்.நந்தகுமார்,  திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மு.முத்துசாமி,  மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார்,  ஈஷா யோக மையம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினர்,  கல்வி, தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பேரூர் ஆதீனமாக பொறுப்பேற்றார் மருதாசல அடிகளார்

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வெள்ளிக்கிழமை முக்தியடைந்தார். இதைத் தொடர்ந்து ஆதீன வளாகத்திலேயே அவரது உடல் திருச்சமாதியாக வைக்கப்பட்டு அடிகளார்கள் சார்பில் தமிழ் முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து இளையப் பட்டம் மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை பல்லக்கில் அமர வைத்து ஆதீன வளாகத்தைச் சுற்றி திருவீதி உலாவாக அழைத்து வந்தனர்.  பின்னர் அவர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திருச்சமாதி செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com