ரயில்வே மேம்பாலம் அமைக்க விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

கரவளி மாதப்பூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கரவளி மாதப்பூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.பாபு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, கரவளி மாதப்பூர் பகுதியில் விவசாயி கலாமணி என்பவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. கரவளி மாதப்பூர் வழியாக கணியூருக்கு செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக நெடுஞ்சாலைத் துறை நில அளவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலம் விவசாயி கலாமணிக்கு சொந்தமான நிலம் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறு வழிச்சாலை அமைக்க தற்போது மேம்பாலம் அமைக்கும் பகுதிக்கு 200 மீட்டருக்கு முன்னால் நில அளவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு மேம்பாலம் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே நில அளவீடு செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். 
கரூர்-கோவை ஆறு வழிச்சாலை திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. கலாமணிக்கு சொந்தமான நிலத்துக்கு மேற்கு பகுதியில் பாலம் அமைக்க தேவையான தரிசு நிலம் உள்ளது. மேற்கு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பட்சத்தில் கணியூ- அவிநாசி சாலை-காங்கயம்பாளையம்-திருச்சி சாலைகளை இணைக்க உதவும். 
 மாறாக, விவசாயின் நிலத்தில் மேம்பாலம் அமைத்தால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் 200 தென்னை மரங்கள் பாதிக்கப்படும். மேலும் நீர் ஆதாரமும் பாதிக்கப்படும். மேற்படி திட்டத்தை செயல்படுத்தினால் கரவளி மாதப்பூர் ஊர் நடுவே செல்லும் கனரக வாகனங்கள் நொய்யல் ஆற்றை கடக்க வேண்டி வரும். அவ்வாறு கடந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் நெடுஞ்சாலைகளுடன் இணைக்க முடியாது என மனுவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com