கோவையில் 14 மையங்களில் நீட் பயிற்சி தொடங்கியது

கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்காக 14 பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கின. மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட

கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்காக 14 பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கின.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி பெறுவதற்காக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 14 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, கோவையில் சனிக்கிழமை முதல் 14 பயிற்சி மையங்களிலும் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற இந்த பயிற்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 தமிழ் வழியில் பயிலும் 460 மாணவர்களும், ஆங்கில வழியில் பயிலும் 92 மாணவர்களும் பங்கேற்றனர்.
அதேபோல், பிளஸ் 2 தமிழ் வழி மாணவர்கள் 659 பேர், ஆங்கில வழி மாணவர்கள் 179 பேர் என மொத்தம் 1,387 பேர் பங்கேற்றனர். ஜே.இ.இ. எனப்படும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் மொத்தம் 529 பேர் பங்கேற்றதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயிற்சி மையங்களில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணித பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்கள், வார விடுமுறை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com