கோவையில் அண்ணா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு கட்சியினரால் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது


மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு கட்சியினரால் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்டச் செயலர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மலரவன், கே.பி.ராஜூ, முன்னாள் மண்டலச் செயலர் ஆதி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், திமுக சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், குமரேசன், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி, இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்...: மேட்டுப்பாளையத்தில் அதிமுக நகர செயலர் ஏ.வான்மதி சேட் தலைமையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட நிர்வாகிகள் நாசர், கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுலோச்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர செயலர் முகமது யூனுஸ் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டச் செயலர் அலாவுதீன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேட்டுப்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் கோவை மாவட்டப் பொருளாளர் பி.என்.ராஜேந்திரன் தலைமையில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி, நகரச் செயலர் ஜெயக்குமார், காரமடை கிழக்கு ஒன்றியச் செயலர் செல்வகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் சத்யராஜ்: மதிமுகவின் முப்பெரும் விழா, மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்திருந்த நடிகர் சத்யராஜை, அக்கட்சியினர் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும்
நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் வந்த சத்யராஜ், மதிமுக, திமுகவினருடன் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காரமடையில்...: காரமடை காந்தி மைதானத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றியச் செயலர் பி.டி.கந்தசாமி, நகரச் செயலர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அன்னூரில்...: அன்னூரில் அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சௌகத்அலி, கரியாம்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.எஸ்.சாய்செந்தில் ஆகியோர் தலைமையில் பயணியர் மாளிகை முன்பு அண்ணா உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அன்னூர் ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இ.ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னூர் ஆர்.நடராசன் முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் ரஹமத்துல்லா வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினர்.
வால்பாறையில்...: வால்பாறை நகரில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வால்பாறை அமீது தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். நகரச் செயலாளர் மயில்கணேசன், துணைச் செயலாளர் பொன்கணேஷ் உட்பட திரளானோர் இதில் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்த பாபுஜி, நெல்லை செல்வன், சண்முகவேல் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் த.பால்பாண்டி தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com