பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

கோவை பெரிய கடை வீதி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

கோவை பெரிய கடை வீதி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
 தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கோவையில் பூம்புகார் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் விழாக் காலங்களில் பல்வேறு கண்காட்சி, சிறப்பு விற்பனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது.
 இதற்கான நிகழ்ச்சியில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் வி.லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அக்டோபர் 20 ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், மரப்பாச்சி பொம்மைகள், அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர், கடோத்கஜன், பக்த பிரகலாத பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை, உரியடி, கோபியர், ஜலக் கிரீடை, ராகு கேது உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள், கோயில், வீடுகளின் மாதிரிகள், கொலு அலங்காரப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உள்ளது என்றும் இந்தக் கண்காட்சி மூலம் ரூ.50 லட்சத்துக்கு விற்பனை நடைபெறும் என்றும் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ரா.நரேந்திர போஸ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com