மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அலுவலக வளாகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இதில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், ஆறுகுட்டி, முன்னாள் அமைச்சர்கள் செ.மா.வேலுச்சாமி, பா.வ.தாமோதரன், கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் இ.ஆர்.சந்திரசேகர், முன்னாள் மண்டலத் தலைவர் ஆதிநாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் டி.ஜெ.செல்வகுமார், எஸ்.ஜெ.அசோக்குமார், இளைஞரணி இணைச் செயலர் பப்பாயா ராஜேஷ், மாணவரணித் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணித் துணைத் தலைவர் கே.எம்.பாலமுரளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழு முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை!

காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!
ஜா vs ஜெ; இபிஎஸ் vs ஓபிஎஸ்; இபிஎஸ் vs வேலுமணி! மீண்டும் மீண்டுமா?
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
