நீராதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரசாரம்

கோவையில் நீராதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர்களிடம் உறுதியளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கோவையில் நீராதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர்களிடம் உறுதியளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.  
கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். காளப்பட்டி, வீரியம் பாளையம், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது, பி.ஆர்.நடராஜன் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலையின்மை பிரச்னை இருந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த நிலை மாற தீவிர முயற்சி எடுப்பேன்.  நீராதாரங்களைப் பாதுகாக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பேன் என்றார். பிரசாரத்தின் போது, திமுக பகுதி கழக பொறுப்பாளர் பையாக் கவுண்டர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லோகநாதன், ரகுராமன், குணசேகரன், மதிமுக நிர்வாகிகள் விஸ்வராஜ், சின்னையன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com